Archives

அன்னையின் அருள்வாக்கு

பெற்ற பாசத்திற்கு அன்று தொப்புள் கொடி,வளர்த்த பாசத்திற்கு இன்று கட்டு முடி…” அம்மா நமக்காக ஏற்படுத்தித் தந்த தைப்பூச சக்திமாலை இருமுடி எனும் பொன்னான வாய்ப்பை அம்மா கூறியபடி சிறப்பான முறையில் பயன்படுத்தி,நம் முன் ஜென்ம,நிகழ்கால பாவ மூட்டைகளைக் குறைத்து,ஆன்ம ஈடேற்றத்தையும்,வேண்டிய வரங்களையும் பெற்று வாழ்வில் மேன்மையடைவோம். ஒம்சக்தி பராசக்தி…”

விதியையே மாற்ற வேண்டுமானால்…
உன் விதியை மாற்றியமைக்கும் வல்லமை எனக்கு உண்டு. சாதரணமாக உன் விதியை அனுபவிக்கும் படி நான் விட்டு விடுகிறேன். என்னிடம் அளவுகடந்த பக்தி செலுத்தி, சரணாகதியடைந்து நான் சொல்கிற பணிகளைச் சிரத்தையோடு செய்து வந்தால், அப்போது உன் விதியையும் மாற்றியமைக்கும் செயலை மேற்கொள்கிறேன்

“இருமுடி – பொருள்: இருமுடி என்பதற்கு இருள்முடி என்று பொருள். இதயத்தில் உள்ள இருளைப் போக்க் அணியும் முடி என்ரு பொருள். கணவன், மனைவி இருவரின் அகத்தோற்றத்தையும்் முடி போடுவது என்று பொருள். மற்றும் மனிதனின் அகமும், புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும். அம்மாவின் அருள்வாக்கு.”

:: குடும்பத்தோடு சந்நிதிக்கு வா ::.

பணக்கஷ்டம் காரணமாகத் தொண்டர்கள் சிலர் தாம் மட்டும் அடிக்கடி மருவத்தூர் வருவார்கள்; விழாக்காலங்களில் மட்டும் தான் குடும்பத்தை அழைத்து வருவார்கள்! அவர்கள் நிலை அப்படி! ஆனால் அம்மா அதனை ஏற்றுக் கொண்டது இல்லை!

“அடிக்கடி குடும்பத்தோடு வந்து சந்நிதியை மிதித்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்கிறேன். ஆனாலும் எவனும் கேட்பதில்லை மகனே! இங்கே அடிக்கடி குடும்பத்தோடு வருவதற்குக் கணக்குப் பார்க்கிறான்! ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் (பிரச்சினை) வந்துவிட்டால் பாதிராத்திரியில் எழுந்தோடிப் போய் மருத்துவன் வீட்டுக் கதவைத் தட்டி அவன் கேட்பதை அப்படியே கொடுத்துவிட்டு வருகிறான் மகனே! குறிப்பாகச் சொன்னாலும் புரியவில்லை மகனே!” என்றாள் அன்னை

“நெருப்பைக் கண்டு எச்சரிக்கையாக இருப்பது போல் தீமைகளைக் கண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”-அம்மா
“அதிகம் ஆசைப்படுபவனே உண்மையான ஏழை “-அம்மா

“எவனொருவன் ஆதிபராசக்தி மண்ணை மிதித்து விட்டானோ அவனுக்கு ஆன்மிக ஞானம் வர ஆரம்பித்துவிட்டதென்று பொருள். அவனுக்கு அதற்கேற்ற பலன் உண்டு.
எவ்வளவுக்கெவ்வளவு ஒருவன் பொறுமையைக் கடைப்பிடிக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் உள்ளத்தில் தெளிவு ஏற்படும். அப்போது தெய்வ நிலையை உணர முடியும்.

பிரபஞ்ச ரகசியங்கள் தெரிய வேண்டுமா?

“மகனே! தந்திக் கம்பி மேல் உட்கார்ந்திருக்கும் பறவைகட்கு அந்தக் கம்பி வழியே செல்லும் செய்தி என்ன என்று தெரியாது. அதுபோல என்மீது அமா்ந்திருக்கும் உங்களுக்கு என் மூலமாகச் செல்லும் செய்திகள் தெரியாது.

உங்களுடைய அறியாமைக்காக இதைச் சொல்கிறேன்.
பறவைகள் செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் மனது வைத்தால் அந்த ரகசியங்கள் உங்களுக்குத் தெரியவரும்.

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தொலைபேசிச் செய்தி சென்று கொண்டிருக்கும். ஆனால் இடையில் ஏதோ ஒரு கம்பத்தின் மீது ஏறிக்கொண்டு ஒரு சாதனத்தின் துணையுடன் ஒரு மனிதன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீா்கள்.

அது போல, பிரபஞ்ச ரகசியங்களை உரிய சாதனத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள முயற்சி செய்!”

பின்னோக்கிச் சென்று விட்டாய்

“மகனே! உண்மையிலேயே நீ என்னுடைய நெறியைப் பின் பற்றியிருந்தால் எவ்வளவு செய்திகளை நான் தந்திருப்பேன்? முறையாகப் பயிலாததால் முறையாகக் கடைப்பிடிக்காததால் நீ 200 நூற்றாண்டுகள் பின் நோக்கிச் சென்று விட்டாய் என்பதை மறவாதே!”

“செவ்வாடைக்கு செம்மை உண்டு .மகிமை உண்டு ஆகவே செவ்வாடை அணிந்து வருகிறவர்கள் அவற்றை சிதறடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்”.-அன்னையின் அருள்மொழி

“சோதனைகள் தான் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறது”-அம்மா
“ஆசைகள் குறையக் குறைய ஆன்மா அமைதி பெறும். எதையும் தாங்கும் சக்தி பெறும்”-அம்மா

நீ செய்யும் காரியங்களின் பலனை நீ அனுபவித்துத் தான் ஆக வேண்டும்-அம்மா
தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் வளரவிடக் கூடாது. கேட்கிற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்க வேண்டும். –அம்மா

“ஆன்மீக குரு அம்மாவின் அருள் எப்போதும் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எந்த வினையும் உன்னை அணுகாது.”
-அன்னையின் அருள்வாக்கு

அன்னையை மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆலயம் வலம் வந்து அன்னையை சரணடைந்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்.- அம்மா

இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே! உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, உன் குடும்பத்தில் உள்ள அழுக்கு, இவ்விரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி!
ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியால் பயனில்லை –அம்மா

..::அம்மா::..
அ- என்பது உயிர் எழுத்து
ம் – என்பது மெய் எழுத்து
மா- (ம்+ஆ) -உயிர் மெய் எழுத்து,
உயிராய் மெய்யாய் எம்முள் என்றும்
உயிர்மெய்யாய் உறைந்திருப்பவளே அம்மா !……

உன் மனம் மட்டும் தூய்மையாக இருந்துவிட்டால் எந்த வினையும் இல்லை. எந்த சூனியமும் இல்லை.
-அன்னையின் அருள்வாக்கு.
“ஓம் குருவின் திருவடியே போற்றி ஓம்”

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைக்காதே, விஞ்ஞானத்தால் பணத்தையும் பொருளையும் படைக்கலாம். ஆனால் மனதுக்கு நிம்மதி. என்னிடம்தான் வரவேண்டும்.
-அன்னையின் அருள்வாக்கு

கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டால், பல ஊழ்வினைகள் மாறும். சக்தியருள் கிட்டும். துன்பம் நீங்கும்.
மன அமைதி கிடைக்கும்.
-அன்னையின் அருள்வாக்கு

ஆன்மீக குரு அம்மாவின் அருள் எப்போதும் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எந்த வினையும் உன்னை அணுகாது.
-அன்னையின் அருள்வாக்கு.

” யார் சக்தி மாலை அணிந்து இருமுடி சுமந்து 9 முறை மருவத்தூர்  வந்தால் பில்லி சூனியம் அவர்களை தாக்காது

ஆலயத்திற்கு எப்படி வர வேண்டும்?
இன்னதற்கு இன்ன பலன் என்று எதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆலயத்திற்கு வரக் கூடாது. அம்மா! என்ற பாச உணர்வுடன் வந்தால் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவேன்.

தேவர்களும் முனிவர்களும் முழு உடல் மூடும் அளவு புற்று வளர தவம் இருந்தும் காணப் பெறா கடவுளவள் இக்கலியுகத்தில் எமைக்காக்க மானிட ரூபத்தில் எம் கண் முன்னே எழுந்தருளி இருக்க அதை காணப்பெற்ற எம் கண்கள் என்ன புண்ணியம் செய்தனவோ……ஓம் சக்தி

“இந்த மண்ணை மிதித்தாலே அதற்கு ஏற்ற பலன் உண்டு “.-அன்னையின் அருள்மொழி

“குடிப்பழக்கம் பெண்டாட்டி பிள்ளைகளை மறக்க வைப்பது .இங்குள்ள சக்திகள் குடிகார கனவனை எப்படியாவது என்னிடம் அழைத்து வாருங்கள் .என்னிடம் வந்தால் மறக்க வைப்பேன்”-அன்னையின் அருள்மொழி

“அம்மா அருள் கொடுக்க நினைக்கிற நேரத்தில்தான் ஒருவனுக்கு சிரமத்தை கொடுக்கும்; புத்தியை மாற்றும் , அப்படிப்பட்ட நேரத்தில் ஏமாந்து விடாதே! எனக்கு கட்சி வேண்டாம் சாதி வேண்டாம் உன் அருள் தான் வேண்டும் என்று இரு”.-அன்னையின் அருள்மொழி’

“உன் மனம் மட்டும் துாய்மையாக இருந்துவிட்டால் எந்த வினையும் நெருங்காது. சூனியமும் கிடையாது.”-அன்னையின் அருள்வாக்கு

ஒருவனுடைய நிதானம், தெய்வ பக்தி, அவன் எப்படிப்பட்டவன் என்பதையெல்லாம் அவன் கண்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

நினைத்துப்பார்:

நாம் பிறந்து வளர்ந்து இதுவரை யாருக்கும் என்னென்ன நன்மை செய்தோம் என்று அடிக்கடி நினைத்துப் பார்க்கும் பழக்கம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.

உங்கள் தொண்டு வீண் போகாது

எனக்கு நீங்கள் செய்யும் தொண்டு எதுவும் வீண் போகாது மகனே! யார் யாரெல்லாம் குடும்பத்தைவிட்டு, தொழிலை விட்டு, தொண்டு செய்கீறீர்கள் எல்லாம் அறிவேன் மகனே! நீங்கள் செய்யும் தொண்டுகளும் இந்தத் தாய்க்குத் தெரியும். உங்கள் தொல்லைகளும் தாய்க்குத் தெரியும் மகனே!

அம்மாவின் அருள் எப்போதும் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் போதும் எந்த வினையும் உன்னை அணுகாது.
-அன்னையின் அருள்வாக்கு

என் ஆலயத்திற்கு வந்துவிட்டாலும்,வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும்.திருந்தி வாழ முற்படாமல் ஆலயத்திற்கு வந்து போனால் மட்டும் போதாது…”
-இது அன்னையின் அருள்வாக்கு

அம்மாவிடம் வந்து விட்டோம்,அவள் திருவடிகளைச் சரணடைந்துவிட்டோம்.எனவே முன் ஜென்ம,நிகழ்கால பாவ வினைகள் எல்லாவற்றையும் அன்னை பார்த்துக்கொள்வாள்.

எனினும் செய்த பாவவினைகளுக்கான பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும்.அன்னையிடம் சரணடைவதால் அவ்வினைகளுக்கான பலன்களை நோகாமல் அனுபவிக்கச்செய்கின்றாள்.

எனவே நாம் அன்னையின் வழிகாட்டலின் படி அவள் கூறுகின்ற முறைகளைப் பின்பற்றி, புண்ணியச்செயல்களைச் செய்து பாவச் சுமைகளைக் குறைத்து ஆன்ம ஈடேற்றத்தை நாம் அடையவேண்டும்.

ஓம்சக்தி!!!

அடிகளார் என்கிற ஒரு ஜீவன் இல்லையென்றால் எதுவும் அசையாது என்பதை புரிந்து கொள்
-அன்னையின் அருள்வாக்கு

அம்மாவின் ஆசி.

உங்களுக்கு. மீண்டும் நான் சொல்வது இதுதான்.
உண்மையாக வாழுங்கள். உழைத்து வாழுங்கள்.
வறுமை நோக்கிச் செல்லாதீர்கள். வளர்ச்சி வரும்.
அப்போது வளமையும் வரும்.
அதை அனைவருக்கும் வழங்குங்கள்.
மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அன்பு பண்பு, பாசம் மிகவும் முக்கியம். அதை உங்களிடம் காட்டுவது போலவே மற்றவரிடமும் காட்டுங்கள். அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அனைவரும் இன்பமுடன் வாழட்டும். மற்றவரையும் வாழ விடட்டும்.
——-இது அம்மாவின் ஆசி.

CAPTIONS:  ammavin arulvakku, adhiparasakthi arulvakku,melmaruvathur  adhiparasakthi arulvakku,amma’s arulvakku,amma, ammavin asi,amma,mother goddess,adhiparasakthi amman,melmaruvathur,adigalar amma,adigalar,patha poojai, irumudi patri ammavin arulvakku

Advertisements