Thaipoosa Jothy 2015 February 3rd

Thaipoosa Jothy will be lighted in Melmaruvathur Adhiparasakthi Siddhar peedam by Arul Thiru AMMA on February 3rd.

After completion of Sakthi Maalai Irumudi fasting Sakthis witnes the thaipoosa jothy lighted by AMMA.

Live telecaste will be available in various television1477480_716829454995943_862074088_n channels.

Captions:

Thaipoosa jothy,  Thaipoosa jothi 2015, Jothy,jothi, AMMA etrum jothi, adigalar amma,melmaruvathuril jothi

SAKTHI MAALAI IRUMUDI 2014-2015

SAKTHI MAALAI IRUMUDI offering started in MELMARUVATHUR ADHIPARASAKTHI SIDDHAR PEEDAM on november 3,2014 and lasts till February 2,2014.

Thaipoosa Jothy Feburary 3rd.

MELMARUVATHUR ADHIPARASAKTHI SIDDHAR PEEDAM contact number:

source:http://www.omsakthi.com/contactus.htm

For any Enquiry or Information call to updated Telephone No.
91-044-27529313, 27529199, 27529276 (Omsakthi Temple)

SAKTHI MAALAI IRUMUDI 2013-2014

Sakthi maalai irumudi  for the year 2013

starts at november 22nd  2013

and will last till January 15th 2014.

January 16th will be the thai poosa jothy   lighted by  arul thiru AMMA.IRUMUDI

Tags : OMSAKTHI IRUMUDI. MELMARUVATHUR IRUMUDI.BANGARU AMMA IRUMUDI. ADHIPARASAKTHI IRUMUDI

சக்திமாலை – இருமுடியும், சக்திவிரதமும்: மேல்மருவத்தூர்

சக்திமாலை – இருமுடியும், சக்திவிரதமும்.
*****************************************

“அன்னையை மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி, சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து, மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை வலம் வந்து அன்னையிடம் சரணடைந்தால், நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்””சக்திமாலை அணியும் பொழுது ஒரு நிமிடமாவது தன்னை மறந்து சந்தோசமாக இருக்க வேண்டும்.”

“பிறந்ததிலிருந்து இன்றுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்.”

“கருவறை முன்பு அபிடேகம் செய்யும் போது அரை நிமிடமாவது மனதை ஒருமுகப் படுத்தினால் கூட இந்த முறை இருமுடி அணிந்த பலனைத் தருகிறேன்.”

– சக்திமாலை குறித்த அன்னையின் அருள்வாக்குகள்.

சக்தி மாலை:

சக்தி மாலையைச் சிறு பிள்ளைகள் உட்பட ஆண், பெண் அனைவரும் வயது வரம்பு இன்றி அணியலாம். சக்திமாலையை அணிந்து பக்தர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே ஐந்து அல்லது மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டு மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை அடைய வேண்டும்.

சக்திமாலை அணிபவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திலோ/சக்திபீடத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள மன்றத்திலோ/ சக்திபீடத்திலோ தான் மாலை அணிய வேண்டும்.

சக்திமாலை, இருமுடிப் பை, டாலர் அகியவற்றினைச் சித்தர் பீடத்திலிருந்தோ அல்லது சித்தர் பீடத்திலிருந்து வாங்கி வைத்திருக்கும் மன்றங்கள் / சக்திபீடங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

சக்திமாலை அணிந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது முதலில் “ஓம்சக்தி” என்று சொல்லுதல் வேண்டும்.

சக்திமாலை அணிந்து விரதமிருந்து சித்தர் பீடம் வந்து திரும்பப் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு தடையல்ல.

சக்திமாலை அணிந்திருக்கும் காலங்களில், உறவினர், பங்காளிகள் வீட்டில் அசம்பாவித காரியங்கள் ஏற்படுமானால் தீட்டு எனக்கருதி மாலையை கழற்றத் தேவையில்லை. மாலையுடனேயே மேற்படிக் காரியங்களில் பங்கேற்று தொண்டாற்றலாம்.

மாலை அணிபவர்கள் (பணிக்கு செல்பவர்கள் உட்பட) ஒன்பது முறைகளுக்கு மேல் மாலை அணிபவர்கள் மஞ்சள் நிற உடைகளும் மற்றவர்கள் சிவப்பு நிற உடைகளும் மட்டுமே அணிய வேண்டும்.

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும். ஐம்புலன்களை அடக்கி, மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும்.

உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும். விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும். மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

காலை, மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும். காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம்.

மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம், ஐவர் குழுவாகவோ, மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு, ஒவ்வொருவர் வீட்டிற்கும், மற்றவர்கள் சென்று அவர்கள் வீட்டிற்கு திருஷ்டி கழித்துவிட்டுக் கூட்டு வழிபாடு செய்துவிட்டு அவர்கள் வீட்டில் அளிக்கும் உணவை உண்ண வேண்டும்.

மேல்மருவத்தூர் புனிதப் பயணம்:

சக்திமாலை அணிந்தவர்கள் மேல்மருவத்தூர் புனிதப் பயணம் துவங்கும் முன் யாரேனும் ஓர் ஏழை வீட்டிற்குச் சென்று செவ்வாடை மீது இருமுடி இறக்கி வைத்து, அவர்களுடன் கூட்டு வழிபாடு நடத்தி தாம் தம்முடைய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உணவைத் தயாரித்தோ அல்லது கொண்டு சென்றோ அவர்களுக்கு முதலில் உணவு அளித்து விட்டு, பின்னர் அங்குச் சென்ற சக்திகள் உணவருந்த வேண்டும். அந்த ஏழை வீட்டிற்கு முடிந்த அளவு ஆடைதானம் செய்வது சிறப்பு.

பயணம் துவங்குபவர்கள் சற்று தூரம் நடந்து வர வேண்டும். தனி வண்டியில் வருபவர்கள் வண்டியில் அன்னையின் திருவுருவப் படத்தினைப் பொருத்தி மாலையிட்டு, ஆராதனை செய்து வண்டியைச் சுற்றி வந்து, எலுமிச்சம் பழம் பிழிந்து ஊர்தியில் ஏற வேண்டும். முடிந்த வரையில் இரவு நேரங்களில் பயணம் தவிர்க்கப்பட வேண்டும். உந்து வண்டியில் வருபவர்களும், சக்திமாலை செலுத்தியபின் வீட்டிற்கு செல்பவர்களும் 50 கி.மீ. வேகத்திற்கு மிகாமல் பயணம் செய்ய வேண்டும்.

இருமுடிப் பையைத் தோளில் அல்லது தலையில் ஆடைக்கேற்ப எடுத்துச் செல்ல வேண்டும். இயற்கைக் கடன்களைக் கழிக்க வேண்டியிருப்பின் இருமுடியை உடன் வரும் மாலை அணிந்தவர்களிடம் தந்து விட்டுச் செல்ல வேண்டும். தரையில் வைக்கும் போது செவ்வாடை பரப்பி அதன் மேல் இருமுடியை வைக்க வேண்டும்.

இருமுடி செலுத்துதல்:

மேல்மருவத்தூர் சித்தர் பீடதிற்குள் வரிசையாக மந்திரங்களை மனதிற்குள் சொல்லிக்கொண்டு மௌனமாக வர வேண்டும். இருமுடி தொண்டில் இருக்கும் தொண்டர்கள் வழிகாட்டுதல் படி நடந்து கொள்ளவேண்டும். கருவறைக்குச் சென்று தனது மாலையை தானே கழற்றி சுயம்பு அன்னைக்கு அபிடேகம் செய்து, அபிடேகத்திற்கு பின் தானே அணிந்து கொள்ள வேண்டும்.

பிறகு தன்னால் முடிந்த தொண்டினைச் செய்து விட்டு தியானம் செய்து, நீராடி அங்கவலம் வருதல் வேண்டும். உடல் நலிவுற்றவர்கள், கருவுற்றுள்ள பெண்கள், மிகவும் வயதானவர்கள் அங்கவலம் வரத் தேவையில்லை.

சித்தர் பீடத்திலிருந்து கிளம்பும் முன் மாலை அணிந்தவர்களுக்கு, குரு சக்தி எலுமிச்சம் பழம், பூசணிக்காய் கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும்.

மாலையைக் கழற்றும் முறை:

சித்தர் பீடத்திலிருந்து வீடு திரும்பும் வரை, சக்திகள் அவரவர்களுக்குரிய மஞ்சள் அல்லது செவ்வடையில் தான் இருக்க வேண்டும். வீடு திரும்பும் போது வேறு எங்கும் செல்லாமல் வீடு திரும்பி அன்னையின் திருவுருவப் படத்தின் மேல் மாலையைக் கழற்றி அணிவித்து விரதத்தினை முடித்துக் கொள்ள வேண்டும்.

சித்தர் பீடத்தில் கொடுக்கப்பட்ட அரிசியுடன் தேவையான அளவு அரிசி கலந்து சர்க்கரை அல்லது வெண் பொங்கல் செய்து தீபாராதனை காண்பித்து, திருஷ்டி கழித்து அனைவரும் உண்ண வேண்டும்.

முக்கிய குறிப்பு:

ஒன்பது முறை சக்தி மாலை அணிந்து இருமுடி அபிடேகம் செய்தி முடித்தவர்கள் பத்தாவது முறை சக்திமாலை அணிவதற்கு முன்பாக, ஒன்பது முறை அணிந்த சக்திமாலையிலிருக்கும் டாலரை தங்கள் வீட்டு முன் வாயிலில் அல்லது பூசையறை வாயிலின் மேல் ஸ்ரீ சக்கரம் தெரியுமாறு பதித்துவிட வேண்டும். ஒன்பது முறை இருமுடி அபிடேகம் முடித்த சக்திமாலை மற்றும் இருமுடிப் பை ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.

பத்தாவது சக்திமாலை அணிய மஞ்சள் இருமுடிப் பை மற்றும் மாலை, டாலர் புதியதாக வாங்கிக் கொள்ளவேண்டும்.

அவ்வாறே பதிமூன்று முறை மாலை அணிந்து இருமுடி அபிடேகம் செய்து முடித்தவர்கள் 14 வது மாலை போடும் முன் 13 மாலை செலுத்திய ஒருவரின் டாலரை தங்கள் வீட்டு முன் வாயிலில் அல்லது பூசையறை வாயிலின் மேல் டாலரில் உள்ள அம்மன், சுயம்பு வெளியே தெரியுமாறு பதித்துவிட வேண்டும். 13 முறை இருமுடி அபிடேகம் முடித்த சக்திமாலை மற்றும் இருமுடிப் பை ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.

14 வது சக்திமாலை அணிய மஞ்சள் இருமுடிப் பை மற்றும் மாலை, டாலர் புதியதாக வாங்கிக் கொள்ளவேண்டும்.

“ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா!”

– ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலை வெளியீடான “சக்தி விரதமும் – சக்தி மாலை அணியும் முறையும்” என்ற நூலிலிருந்து.

இருமுடி பற்றிய அன்னையின் அருள்வாக்கு:

“தொடர்ந்து இருமுடி செலுத்து! ஒன்பது மாலை போதும்! பத்து மாலை போதும்! என்று நிறுத்திக் கொள்ளாதே! நீ செலுத்தும் ஒவ்வொரு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு.”

“எங்கெங்கே அதிக அளவில் சக்தி மாலை அணிந்து இங்கு வந்து இருமுடி செலுத்துகிறார்களோ அங்கே அழிவுகள் அதிகம் இருக்காது.”

சக்தி மாலை இருமுடி

• அன்னை அவள் அருள் பெறவே
அவள் அருளிய இருமுடி
• ஆதிபராசக்தியை கண்டிடவே
ஆண்டுக்கொருமுறை இருமுடி
• இன்னல் தீர்க்க இனியவழி
இன்பமாய் சுமப்போம் இருமுடி
• ஈடு இணையற்ற வாழ்வதனை
ஈட்டித் தந்திடும் இருமுடி
• உள்ளக் கழிவை களைந்திடவே
உவந்து அணிவாய் இருமுடி
• ஊழ்வினை செய்வினைகளை
ஊதித்தள்ளிடும் இருமுடி
• எல்லா நலனும் பெற்றிடவே
ஏந்தி வருவோம் இருமுடி
• ஏவல் பில்லி சூனியத்தால்
ஏங்குவோரை காக்கும் இருமுடி
• ஐஸ்வரியம் பல பெறவும்
ஐம்புலனை அடக்கிடவும் இருமுடி
• ஒப்பில்லா வாழ்வு பெற
ஒவ்வொரு ஆண்டும் இருமுடி
• ஓங்காரி உன்னை தேடி
ஓடி வரவே இருமுடி
• ஒளவியம் தீர்த்து எமக்கு
ஒளஷதமாய் வாழ்வளிக்கும் இருமுடி

“ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா!”

– ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலை வெளியீடான “சக்தி விரதமும் – சக்தி மாலை அணியும் முறையும்” என்ற நூலிலிருந்து.

“• அன்னை அவள் அருள் பெறவே அவள் அருளிய இருமுடி • ஆதிபராசக்தியை கண்டிடவே ஆண்டுக்கொருமுறை இருமுடி • இன்னல் தீர்க்க இனியவழி இன்பமாய் சுமப்போம் இருமுடி,”

இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே! உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, உன் குடும்பத்தில் உள்ள அழுக்கு, இவ்விரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி!
ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியால் பயனில்லை –அம்மா

“இருமுடி செலுத்தியும் பலன் கிடைக்க வில்லையே என்று நினைக்க கூடாது .எப்போதும் அதற்கு பலன் உண்டு .எவரையும் நான் கைவிடமாட்டேன்”.-அன்னையின் அருள்மொழி

“திசை தெரியாமல் அலையும் இன்றைய மக்களை திசை திருப்பவே இருமுடி செலுத்த வைக்கிறேன் .ஒருமுறை இருமடி செலுத்தினாலாவது திருந்துவானா என்று பார்க்கிறேன்”.-அன்னையின் அருள்மொழி

“திசை தெரியாமல் அலையும் இன்றைய மக்களை திசை திருப்பவே இருமுடி செலுத்த வைக்கிறேன் .ஒருமுறை இருமடி செலுத்தினாலாவது திருந்துவானா என்று பார்க்கிறேன்”.-அன்னையின் அருள்மொழி

“இருமுடி அணிந்தால் உங்களுக்கு எதிரான மாந்தரிகம் அழியும்”.–அன்னையின் அருள்மொழி

“மகனே ! இருமுடி விஷயத்தில் நம்புகிறவன் நம்பட்டும் .நம்பாதவன் போகட்டும் .என் தேர் ஓடிகொண்டே இருக்குமடா மகனே!”.-அன்னையின் அருள்மொழி

மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா 04-10-2013 14-10-2013

நவராத்திரி விழாவின் சிறப்பு

நவராத்திரி விழாவின் சிறப்பு மேல்மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தி, அருள்திரு அடிகளாராம், நம் அம்மாவின் உருவில் அவதாரம் செய்து,நாம் தொய்வின்றித் தொண்டாற்ற, தொடர்ந்து பல விழாக்களை அமைத்துத் தந்து அவற்றின் வழி மக்களிடம் மனிதநேயம் மலர, அருள் வழங்கி வருகிறாள். நம் உள்ளங்களில் ஆணவப்புழுக்கள், பொறாமைப் பூச்சிகள் சேர்ந்து நம் உள்ளங்களைக் கெடுக்காமல் இருக்க அருள் வழங்கி வருகிறாள். அதாவது “உங்கள் மனதை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகத் தான் இங்கு அடிக்கடி விழாக்களுக்கு அருள் வழங்கி வருகிறேன்.” என்பது அன்னையின் அருள்வாக்கு. சித்தர் பீடத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு வகையாக அமைகிறது. அன்னை ஆதிபராசக்தி, அருள்திரு அடிகளார் உருவில் எழுந்தருளி தம் உடலைவருத்தி நடத்தும் ஆன்மிகப் பெருவிழாக்கள் இரண்டு. ஆடிப்பூரத்தையொட்டி, மருவத்தூர் சித்தர்பீடவளாகத்தில் தம் உடலால் அங்க வலம் வந்து ஆன்மிக ஒளிபாய்ச்சுவது ஒரு நிகழ்ச்சி! புரட்டாதி அமாவாசையன்று, நாகம் போல் தன் உடலை வளைத்து,நெளித்து தம் நாவால் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கிலிருந்து திரியை எடுத்து, அகண்டத் திரியை ஏற்றி , உலகுக்கு அருள்பேரொளி வழங்குவது மற்றொரு நிகழ்ச்சி. சித்தர் பீடத்தில் நடைபெறும் விழாக்களில் நவராத்திரி விழா தனிச் சிறப்பை பெறுகிறது. ”சிவனுக்கு உகந்தது சிவராத்திரி, சக்திக்கு உகந்தது நவராத்திரி” என்று போற்றப்படுகிறது. அன்னை ஆதிபராசக்தி, உலகனைத்தையும் படைத்தளித்து, ஒவ்வொரு நாளும் இரவு பகலாக இடைவிடாது காத்து வந்தாலும், இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் அலைமகளாகவும், மலைமகளாகவும், கலைமகளாகவும் அருளாட்சி செய்கிறாள் என்பது மரபு. ”நவராத்திரி விழா” நம் பாவங்களைப் போக்கிக் கொள்ள நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு ஆகும். நவராத்திரி விழாவில் நமக்கு மூன்று அரிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. 1. அம்மாவால் கருவறைக்குள் ஏற்றிவைக்கப்படும் அகண்டத்தில், நாம் கருவறைக்குள் சென்று முக்கூட்டு எண்ணெய் ஊற்றிப் பேரொளிச் சுடராக உள்ள அன்னை ஆதிபராசக்தியை வழிபடல். 2. அகண்டத்தில் இருந்து பெறப்படும் எண்ணெயை வாங்கி வந்து நம் வீடுகளில் விளக்கேற்றி வழிபடல். 3. இலட்சார்ச்சனையில் பங்கு பெறுதல். உலகிற்கு ஒளி வழங்கும் பொருள்கள் சூரியன், சந்திரன், நெருப்பு, ஆகிய மூன்றும் அன்னை ஆதிபராசக்தி நம்முள் ஒளியாகவும், நமக்கு ஒளி தரும் இம் மூன்றினுள்ளும் இருந்து அவளே ஒளி தருகிறாள் என்பதை அபிராமிபட்டர்”கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே” என்று போற்றுகிறார். “உலகில் அமைதி நிலவவும், மழைவளம் பெருகவும், அகண்ட தீபம் ஏற்றப்படுகின்றது” என்பது அன்னையின் அருள்வாக்கு.அப்படிப்பட்ட அகண்டப் பேரொளியை வழிபட்டால் நம் ஊழ்வினை தணிந்து, துன்ப இருள், அறியாமை இருள், ஆணவ இருள்,ஆகியவை நீங்கி வாழ்வில் இன்பம் காணலாம்.”அகண்டப் பேரொளியை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்.”என்பதும் “அகந்தையை அகற்றும் ஆற்றல் அகண்டத்திற்கு உண்டு.” என்பதும் அன்னையின் அருள்வாக்கு.ஆணவத்தின் மொத்த உருவமாக இருந்த மகிடாசுரனை அன்னை ஆதிபராசக்தி அழித்தாள் என்பதன் அடையாளம் தான் நவராத்திரி விழா ஆகும். ”நவராத்திரி அகண்டத்திற்குக் கண்டத்தை நிவர்த்தியாக்கும் தன்மை உண்டு.”என்பது அன்னையின் அருள்வாக்கு. இதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. கண்டமென்றால் எல்லை என்று ஒரு பொருள். அகண்டத்தை வழிபட்டால் எல்லையில்லாப் பிறவிகளுக்கு, ஒரு எல்லை கட்டி பிறவித்துன்பத்தைப் போக்கும் என்ற தன்மையுண்டு. கண்டமென்றால் கவசம் என்று ஒரு அர்த்தம் உண்டு. நமக்கு அகண்டப் பேரொளி கவசமாக இருந்து துன்பங்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் காக்கும் என்று தோன்றுகிறது. கண்டம் என்றால் ஆபத்து என்று பொருள். நம்மை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காக்கும் என்றும் ஒரு பொருள். ”அகண்டத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி முகர்ந்து வழிபடுவதால் மூன்று வினைகளும் நீங்கும்” என்பது அன்னையின் அருள்வாக்கு. உணவு, உறக்கமின்றி தவமிருக்கும் துறவிகளாலும் நீக்கிக்கொள்ளமுடியாத, மூன்று வினைகளையும் இல்லற வாழ்வில் ஈடுபட்டு வரும், நம் வினைகளை அகண்டப் பேரொளி நீக்கும்.”உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால் வாக்கினில் ஒளி உண்டாகும்” என்றார் பாரதியார். நம் உள்ளத்தில் ஒளி உண்டாக இவ்வொளி வழிவகுக்கிறது. “அகண்டத்திலிருந்து பெறப்படும் முக்கூட்டு எண்ணெய் மூன்று வினைகளையும் நீக்கும்.” அகண்டத்தில் உள்ள அந்த சுடர் ஒளியானது, திரி வழியாக அகண்டத்திலுள்ள எண்ணெய்க்குச் செல்வதால், அந்த முக்கூட்டு எண்ணெய்க்கு, உடல் நோய்களையும், உள்ள நோய்களையும், பழைய வினைகளையும் நீக்கும் ஆற்றல் உண்டு. நவராத்திரியில் அகண்டத்திலிருந்து பெறப்படும் முக்கூட்டு எண்ணெய் வாங்கிவந்து நம் வீடுகளில் முன் வாசல், பின் வாசல், வழிபாடு அறை, போன்ற ஒன்பது இடங்களில் ஒன்பது நாட்கள் ஏற்றி வழிபட்டால் நம் ஊழ்வினை நீங்கி நல்லன நடைபெறுகின்றன. நம் கண்களுக்குத் தெரியாமல் நம் வீடுகளில் இருக்கும் தீய சக்திகள் வெளியேற்றப்பட்டு, நல்ல சக்திகள் குடியேறுகின்றன. “அகண்டத்தில் உள்ளவை பிண்டத்தில் உள்ளன “எனக் கூறுவார்கள். உலகம், நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதைப்போல், நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆகியது. மணிகள் ஒன்பது. கோள்கள் ஒன்பது. தானியங்கள் ஒன்பது, என்பன போன்று ஒன்பது இரவுகள் நவராத்திரி!. “ஒன்பது” என்பதற்குத் தனிப் பெருமை உண்டு.வீட்டில் ஒன்பது இடங்கள் என்று அம்மா குறிப்பிடுவது போல நம் உடலிலும் ஒன்பது வாயில்கள் உள்ளன.திருமூலர் நம் உடலை “ஒன்பது வாசல் உடையதோர் பிண்டம்” என்று கூறுகிறார்.ஆகவே சித்தர் பீடத்திலிருந்து எண்ணெயைப் பெற்று வந்து ஒன்பது இடங்களில் வீட்டில் ஏற்றி வைத்தால் துன்பங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். விளக்கினால் துன்பம் தீரும் என்பதைத் திருமந்திரம் ” விளக்கினை ஏற்றி ஒளியை அறிமின்! விளக்கின் முன்னே வேதனைத் தீரும்.” என்று கூறுகிறது. நவராத்திரி விழாவில் இன்னொரு நிகழ்ச்சி இலட்சார்ச்சனை ஆகும். “இலட்சியத்திற்காக செய்யப்படும் அர்ச்சனை இலட்சார்ச்சனை” என்பது அன்னையின் அருள்வாக்கு. சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவில் நடைபெறும் இலட்சார்ச்சனையில் பங்குபெற்றி பாவங்களைப் போக்கிக் கொள்ளுதல். நம் வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் பெயர், நட்சத்திரங்களைக் கூறி சங்கல்பம் செய்யப்பட்டு 1008, 108, தமிழ் மந்திரங்களால் அர்ச்சனை செய்து ஆதிபராசக்தியை வழிபடும் நிலையே இலட்சார்ச்சனை ஆகும். எனவே நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் நவராத்திரி இலட்சார்ச்சனையில் பங்குபெற்றிப்பயன் பெற வேண்டும். ஊழ்வினையும் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொடர்ந்து வருவதால் ஒவ்வொருவரின் பெயரிலும் தனித்தனியே அர்ச்சனை செய்ய வேண்டும். அகண்டப் பேரொளியால் கல்வியில் ஆர்வம் காட்டி தேர்ந்த அறிவு பெற்றோர் பலர். உடல் நோய் நீங்கப் பெற்றோர். மன நோய் நீங்கப் பெற்றோர். மகப்பேறு பெற்றோர். நல்ல வேலை பெற்றோர். பதவி பெற்றோர் என்று பயன் பெற்றோர் இலட்சக் கணக்கில் உள்ளனர். சக்திகளே! வீடுவீடாகச் சென்று நவராத்திரி இலட்சார்ச்சனையில் பங்குபெற்றி நாம் பெற்ற பயன்களை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்.சாதிசமய வேறுபாடற்ற நிலையில் அனைவரும் கருவறைக்குள் சென்று முக்கூட்டு எண்ணெய் ஊற்றி வழிபடலாமெனச் சொல்லுங்கள். அங்கிருந்து அகண்ட எண்ணெயைப் பெற்று வீடுகளில் ஏற்றி, வாழ்வில் ஒளிபெறலாம் எனச் சொல்லுங்கள். ”யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற எண்ணத்தோடு உங்களோடு மற்றவர்களையும், நவராத்திரி விழாவில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியும், இலட்சார்ச்சனையில் பங்குபெறச் செய்தும் அம்மாவின் அருள்பெறுவோமாக!

ஓம் சக்தி!

நன்றி சக்தி ஒளி செப்டம்பர் 2008 &

http://www.adhiparasakthi.co.uk/